என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அன்னா ஹசாரே"
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தி கிராமத்தில் வசித்துவருகிறார். மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்த அவர் கடந்த 5-ந்தேதி தான் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அப்போது அவரது உடல் எடை 5 கிலோ வரை குறைந்துவிட்டது.
இந்நிலையில் நேற்று அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டது. அவரை அகமதுநகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவரது மூளைக்கு ரத்தம் செல்வதில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு உடல்சோர்வு மற்றும் சில பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #AnnaHazare #Hospitalised
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் அன்னா ஹசாரே கடந்த 30-ந்தேதி போராட்டத்தை தொடங்கினார்.
அவர் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த நிலையில் 2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா என்னை பயன்படுத்திக் கொண்டது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2014 தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா என்னை பயன்படுத்திக் கொண்டது. லோக்பாலுக்கான எனது போராட்டம் மூலம்தான் பா.ஜனதாவும், ஆம் ஆத்மியும் ஆட்சியை பிடித்தன. இப்போது இவர்கள் இருவர் மீதும் எனக்கு சிறிதளவு கூட மரியாதை இல்லை.
பிரதமர் மோடியின் அரசு மக்களை தவறாக வழி நடத்துகிறது. மராட்டிய மாநில அரசும் கடந்த 4 ஆண்டுகளாகவே பொய்களை கூறி வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பொய்களை கூற முடியும். இந்த அரசு நாட்டு மக்களை கைவிட்டுவிட்டது.
2011 மற்றும் 2014-ல் என்னுடைய போராட்டங்களினால் பயன் அடைந்தவர்கள் இன்று எனது கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறார்கள்.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார். #AnnaHazare #BJP
தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.
உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 7-வது நாளாக இன்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று சந்தித்தார்.
அவருடன் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங், பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே ஆகியோரும் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அன்னா ஹசாரேவிடம் வலியுறுத்தினர். #DevendraFadnavis #AnnaHazare #AnnaHazarefast
தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.
மும்பை:
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேக்கான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
போராட்டத்தின் போது அன்னா ஹசாரே பேசியதாவது:-
எனது உயிருக்கு எதுவும் நடந்தால் அதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. மோடி அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இன்னும் சில நாட்களில் இதை நிறைவேற்ற தவறினால் எனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை திருப்பி அனுப்புவேன்.
நான் விருதுக்காக பணியாற்றுபவன் அல்ல. நாட்டுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் பணியாற்றுவதற்காக எனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது. மோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்னா ஹசாரே போராட்டத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. #AnnaHazare #bjp #PadmaBhushanaward
காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தை கொண்டு வரவும், லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகிறார். லோக் ஆயுக்தாவை நியமிக்காவிட்டால் காந்தி பிறந்த தினமான கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என அறிவித்தார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மகாராஷ்டிர மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கினார். இதைத் தொடர்ந்து, தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தார்.
அதன்படி, அன்னா ஹசாரே தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். தனது உண்ணாவிரதம் எந்த கட்சியையும் எதிர்த்தோ மற்றும் தனிப்பட்ட நபரை எதிர்த்தோ நடத்தப்படவில்லை என்றும், நாட்டின் நலனுக்காகவே உண்ணாவிரதம் இருப்பதாகவும் கூறியுள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்